தகாத உறவில் ரகசிய காதலியின் கணவர் இடையூறு.. எரித்து கொன்று வெறிச்செயல்!
உளுந்தூர்பேட்டை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவரை ஆற்றங்கரை ஓரம் வைத்து எரித்து கொன்றுள்ளனர்.
மூன்று பெண் குழந்தைகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள செம்மனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார். மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்த சந்தோஷ்குமாருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
புகார்
இந்நிலையில், குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பதற்காக உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தோஷ் குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகைப்படங்கள், செல்போன் எங்களை பதிவிட்டு தேடி வந்ததோடு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
ஊர் மக்கள்
இதற்கிடையே, சந்தோஷ்குமார் குடும்பத்திற்கு பழக்கமாகி கடந்த ஒரு வருடமாக அவர்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் என்பவரும் அங்கு தங்கி சந்தோஷ்குமாரை தேடி வந்துள்ளார்.
ஏற்கனவே முருகன் அடிக்கடி அங்கு வருவதும் சந்தோஷ் குமார் மனைவி வசந்தகுமாரி இடம் நெருக்கமாக பேசுவதையும் அறிந்த ஊர் மக்கள் இதுகுறித்து சந்தோஷ்குமாரிடமும் கூறியதாக தெரிய வருகிறது.
முரணான பதில்
இந்நிலையில்தான், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் எதற்காக செம்மனாங்கூரில் தங்கி சந்தோஷ்குமாரை தேட வேண்டும் என்ற சந்தேகம் ஊர்க்காரர்கள் மத்தியில் எழுந்தது. உடனே முருகனிடம் அதுகுறித்து விசாரித்திருக்கிறார்கள்.
அதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். அப்போது முருகனின் உடலில் காயங்கள் இருந்ததை ஊர்க்காரர்கள் பார்த்திருக்கிறார்கள். எப்படி காயம் ஏற்பட்டது என கேட்டதற்கும் முறையான பதில் கொடுக்கவில்லை.
நடந்தது என்ன?
தாயுடன் சண்டை போட்டதால் காயம் ஏற்பட்டதாகக் கூறி மழுப்பியிருக்கிறார். தொடர்ந்து தன்னை மிரட்டிய ஊர்க்காரர்களிடம் சந்தோஷ்குமாரை தனது வீட்டில் கட்டி போட்டு வைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
உடனே முருகனை அழைத்து கொண்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அவரது தாயாரிடம் விசாரிக்க சந்தோஷ்குமார் என்பவர் அங்கு வரவில்லை என்றும்;
முருகனின் கையில் இருக்கும் காயம் எப்படி ஏற்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த ஊர்க்காரர்கள் முருகனிடம் ஆக்ரோஷமாக விசாரித்திருக்கிறார்கள்.
கையோடு உளுந்தூர்பேட்டை போலீசில் அவரை ஒப்படைத்திருக்கிறார்கள். அதில், முருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காணாமல் போன சந்தோஷ்குமார் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த வசந்தகுமாரி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது முருகனின் காரில் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது, வசந்தகுமாரிக்கும் முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. செல்போனில் பேசி, அடிக்கடி தனிமையில் சந்தித்தவர்களுக்கு இடையே தகாத உறவு உண்டானது. சந்தோஷ்குமார் இல்லாத நேரம் வசந்தகுமாரியுடன் முருகன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.
ஊர்க்காரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அது சந்தோஷ்குமாரின் காது வரை சென்றிருக்கிறார். இதனால் வசந்தகுமாரியிடம் முருகனால் சகஜமாக பேச முடியாமல் போனது. தகாத உறவுக்கு காதலியின் கணவர் இடையூறாக இருப்பதாக ஆத்திரமடைந்த முருகன் அவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
சம்பவத்தன்று மது அருந்தலாம் என்று கூறி முருகனின் வீட்டுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்திற்கு சென்ற சந்தோஷ்குமாரை, சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பின்னர், உடலை சாக்கு மூட்டையில் கட்டி சுங்க சாவடிகளை கடக்காமல் பல்வேறு கிராமங்களைச்சுற்றி கெடிலம் ஆற்றின் கரையோரம் எடுத்து சென்றிருக்கிறார்.
அங்கு வைத்து பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறார். இந்நிலையில் கொலை செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்ட முருகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கணவர் இறப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்.. மீனா உருக்கம்!