உளுந்தூர்பேட்டையில் சாதி பிரச்சினையால் இரு பிரிவினருக்கு இடையே வெடித்த மோதல் - போலீசார் குவிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ள ஏமம் என்ற கிராமத்தில் இரு சமுதாயத்திற்கு இடையே நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 150 குடும்பங்கள் வசித்துவரும் ஏமம் கிராமத்தில், ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் அதே பகுதியில் பாலை விற்பனை செய்வதற்காக கொண்டுச் சென்றபோது அப்பபகுதியில் இருக்கும் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருக்கிறார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த வேறு சமுதாய இளைஞர்கள் அங்கு அமர்ந்து இலைப்பாறி கொண்டிருந்த இளைஞர்களின் சாதி பெயரை சொல்லி மிகவும் கேவலமாக அவரவருக்கத்தக்க வார்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.
ஏன் என் சாதி பேரை சொல்லி திட்டுரீங்க என்று அந்த இளைஞர்கள் கேட்டதற்கு அப்படிதான் திட்டுவேன் என அவர்களை அடித்துள்ளனர்.
அடிவாங்கிய இளைஞர்கள் தங்கள் பகுதிக்கு சென்று நடந்த சம்பவத்தை எடுத்து கூறியுள்ளார்கள், பாதிக்கபட்ட இளைஞர் தங்கள் பகுதியை சேர்ந்த ஆட்களை திரட்டிக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளார்கள்.
அப்போது ஏற்கனவே அங்கு காத்திருந்த இளைஞர்கள், நியாயம் கேட்க சென்ற இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட இளைஞர்கள் நடந்த சம்பவத்தை தங்கள் குடும்பத்திடம் கூறியதை அடுத்து நேரில் சென்று கேட்ட குடும்பத்தாரிடம் தகாத வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என கூறி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
தங்கள் சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற கூடாது எனவும் பாதிப்பட்டோர் சார்பில் பேசிய கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிர்வாகி அற்புதராஜ் தெரிவித்தார்.
மேலும், அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை குறைக்க ஏமம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.