கணவர் இறப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்.. மீனா உருக்கம்!
கணவரின் இறுதி சடங்கின் போது மீனா நண்பர்களுடன் பேசி சிரித்தாகவும், முன்னரே தன கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் ஊடகங்களில் செய்தி பரவியது.
மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை பெற்றவர் மீனா. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் மூலம் 1982 -ல் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்த மீனா.
அன்புள்ள ரஜினிகாந்தின் வெகுவாக பாராட்டப்பட்ட பேபி ஸ்டாராக மாறினார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ள இவர் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
திருமணம்
அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார் மீனா. ரஜினி , கமல், பிரபு, கார்த்தி என டாப் 10 ஹீரோக்களுடன் ஜோடிபோட்டுள்ள இவர் என ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக கதாநாயகி பாத்திரம் பூண்டிருந்தார்.
முன்னரே, தெலுங்கு படமான நவயுகத்தில் ஹீரோயினி அறிமுகம் நடந்தேறியது. கடந்த 2010-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
நைனிகா
இவர்களது திருமண வரவேற்பில் தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த ஜோடிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தனது 5 வயதில் விஜயின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
காதல் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களது வாழ்வில் கொரோனா பேரிடியை இறக்கி உள்ளது. ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் வித்யாசாகர் அவதிப்பட்டு வந்த நிலையில். கடந்த ஜனவரியில் கொரோனா தோற்றால் மொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டது.
மாற்று உறுப்பு
பின்னர் வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக மீனா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரு நுரையீரல்களுக்கு செயல் இழக்க மாற்று உறுப்பு கிடைக்காமல் பரிதாபமாக கடந்த 28 அன்று வித்யாசாகர் உயிரிழந்தார்.
கணவரின் இறுதி சடங்கின் போது மீனா நண்பர்களுடன் பேசி சிரித்தாகவும், முன்னரே தன கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் ஊடகங்களில் செய்தி பரவியது. இது குறித்து பதிவிட்டுள்ள நடிகை மீனா,
அனுதாபம்
"எனது அன்பு கணவர் வித்யாசாகரின் மறைவால் நான் மிகந்த துக்கத்தில் உள்ளேன்.. எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்த சூழ்நிலையில் அனுதாபம் கொள்ளுமாறு அனைத்து ஊடகங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் தவறான தகவல்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். மேலும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தியை காண நாள் முழுக்க காத்திருந்த மூதாட்டி.. நெகிழ்ச்சியான தருணம்!