ராகுல்காந்தியை காண நாள் முழுக்க காத்திருந்த மூதாட்டி.. நெகிழ்ச்சியான தருணம்!

Rahul Gandhi Viral Video Kerala
By Sumathi Jul 01, 2022 06:10 PM GMT
Report

கேரள மாநிலம் வயநாட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள் முழுக்க காத்திருந்ததோடு, ராகுலைக் கண்டதும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்எஃப்ஐ

ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான வயநாடுக்கு இன்று வருகை தந்தார். தனது தொகுதிக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள ராகுல் காந்தி, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான

rahul ganthi

இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினரால் (எஸ்எஃப்ஐ) சேதப்படுத்தப்பட்ட தனது அலுவலகத்தைப் பார்வையிட்டார். சமீபத்தில் ஆளும் சிபிஐ (எம்) இன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு அல்லது

ராகுல் காந்தி

எஸ்எஃப்ஐயின் செயல்பாட்டாளர்களால் சேதப்படுத்தப்பட்ட தனது அலுவலகத்தையும் பார்வையிட்டார். அப்போது ராகுல் காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள் முழுக்க காத்திருந்ததோடு, ராகுலைக் கண்டதும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்தார்.

மேலும் அந்த மூதாட்டி ராகுல் காந்தியின் கன்னங்களை அன்புடன் தடவிக் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி,

 மூதாட்டி

“நாட்டில் எல்லா இடங்களிலும், வன்முறை பிரச்சினைகளை தீர்க்கும் என்ற எண்ணத்தை நீங்கள் காண்கிறீர்கள். மேலும், வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது.. அது நல்லதல்ல.

அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார்கள். ஆனால், எனக்கு எந்த கோபமும் விரோதமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.   

கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட பீர்.. அடேங்கப்பா! இவ்வளவு வரவேற்பா?