வித்யாசாகருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி - அங்கிள்..என கதறி அழுத மீனா..

Rajinikanth Meena
By Nandhini Jun 29, 2022 07:13 AM GMT
Report
140 Shares

பிரபல நடிகை மீனா கணவரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

நடிகை மீனா

நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

மகள் நைனிகா

நைனிகா அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நைனிகாவிற்கு தனது தாய் மீனாவை போலவே புகழை தேடி தந்தது.

கொரோனா தொற்று

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

வித்யாசாகர் மரணம்

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

பிரபலங்கள் இரங்கல்

மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

meena - rajinikanth

ரஜினியைப் பார்த்து கதறி அழுத மீனா

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் ரஜினி அங்கிள்... என்று கதறி அழுதார் நடிகை மீனா. மீனா கதறி அழுததைப் பார்த்து ரஜினிகாந்த் கலங்கிப்போனார். அங்கிருந்தவர்களும் கண்கலங்கி விட்டனர்.