இளையராஜாவிற்கு கிடைத்துள்ளது அங்கீகாரம் , அதில் அரசியல் பார்க்காதீர்கள் : அண்ணாமலை

Ilayaraaja BJP K. Annamalai
By Irumporai Jul 07, 2022 07:28 AM GMT
Report

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. 

இளையராஜாவிற்கு கிடைத்துள்ளது  அங்கீகாரம் , அதில் அரசியல் பார்க்காதீர்கள் :  அண்ணாமலை | Ilayarajas Talent Dont Look Politics Annamalai

அரசியலில் இளையராஜா

இந்நிலையில் இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும் என்றும் அதில் அரசியலை பார்க்கக்கூடாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை :

அம்பேத்கர் வாழ்க்கை குறிப்பைப் பற்றிய ஒரு புத்தகத்தின் முன்னுரையில், அம்பேத்கரின் வாழ்வியல் சிந்தாந்தங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்து கொண்டிருப்பதாக ஒரு வார்த்தையை இளையராஜா கூறினார்.

மாநிலங்களவை நியமன எம்.பியாக இளையராஜா,பி.டி.உஷா நியமனம்..!

இந்தக் கருத்தை இந்தியா முழுவதுமே பல பெரிய மனிதர்கள் உள்பட பலதரப்பட்ட மனிதர்கள் கூறுகின்ற ஒரு கருத்து. இது புதிது கிடையாது. இதே இளையராஜா, கோவையில் தனது பிறந்தநாள் விழாவில், நமது மாநில அரசை பற்றிக்கூட பேசியிருந்தார். 

மாமனிதன் இளையராஜா

 மாநில அரசு நன்றாக பணி செய்வதாககூடப் பேசியிருந்தார். அது எல்லாமே அவருடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். இளையராஜா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஒரு கருத்து கூறினார் என்றால், என்னைப் பொருத்தவரை, அது தனிப்பட்ட கருத்து.

திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்

அதேபோல பிரதமர் மோடி குறித்து ஒரு கருத்து கூறினாலும் அதுவும் அவருடைய தனிப்பட்ட கருத்து. இதில் எதிலுமே அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இளையராஜாவிற்கு கிடைத்துள்ளது  அங்கீகாரம் , அதில் அரசியல் பார்க்காதீர்கள் :  அண்ணாமலை | Ilayarajas Talent Dont Look Politics Annamalai

தமிழகத்தில் அரசியலில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி நண்பர்கள் எப்படி ஆகிவிட்டனர் என்றால், இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு அங்கீகாரத்தைக்கூட, கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இது மிகவும் வேதனையாக இருக்கிறது. சாதி, மதத்திற்குள் அடைக்கக்கூடாத ஒரு மாமனிதன் இளையராஜா என்று அவர் தெரிவித்தார்.