இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Tamil Cinema Ilayaraaja M K Stalin Government Of India
By Thahir Jul 06, 2022 07:40 PM GMT
Report

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜவிற்கு வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா நியமனம்

கலை,இலக்கியம்,விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! | Chief Minister M K Stal Congratulates Ilayaraja

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

M.K.Stalin

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!

இளையராஜாவுக்கு ஜனதிபதி பதவியே கொடுக்கலாம் - கமல்ஹாசன் ட்வீட்..!