இளையராஜாவுக்கு ஜனதிபதி பதவியே கொடுக்கலாம் - கமல்ஹாசன் ட்வீட்..!

Kamal Haasan Ilayaraaja Narendra Modi Government Of India
By Thahir 4 மாதங்கள் முன்

இளையராஜாவை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் இளையராஜாவுக்கு ஜனதிபதி பதவியே கொடுக்கலாம் என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா , பி.டி.உஷா நியமனம் 

கலை,இலக்கியம்,விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்.

இளையராஜாவுக்கு ஜனதிபதி பதவியே கொடுக்கலாம் - கமல்ஹாசன் ட்வீட்..! | Ilayaraja Can Be Given The Post Of President Kamal

நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு ஜனதிபதி பதவியே கொடுக்கலாம் - கமல்ஹாசன் ட்வீட்..! | Ilayaraja Can Be Given The Post Of President Kamal

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.  

எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து