எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜவுக்கு,நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையராஜா தேர்வு
கலை,இலக்கியம்,விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் வாழ்த்து
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja
— Rajinikanth (@rajinikanth) July 6, 2022
மாநிலங்களவை நியமன எம்.பியாக இளையராஜா,பி.டி.உஷா நியமனம்..!