கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர் : இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா சென்னையை தொடர்ந்து கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இன்று இளையராஜாவின் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தற்போது கோவை கொடிசியா வளாகத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர்.
என் தந்தை எனக்கு 'ஞானதேசிகன்' என பெயர் வைத்தார்; கருணாநிதி எனக்கு இசையோடு சேர்த்து 'இசைஞானி' என பெயர் வைத்தார். அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர்தான் கருணாநிதி.
தமிழக மக்களை முன்னேற்றும் பணியில் கருணாநிதியின் பாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் பணிகளை எனக்கு செய்து வருவதாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.