விடாமல் துரத்தும் இளையராஜா; மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு அதிரடி நோட்டீஸ்!

Ilayaraaja Tamil nadu Kerala Manjummel Boys
By Swetha May 23, 2024 05:32 AM GMT
Report

 மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இளையராஜா 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பிரபல குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ்நாட்டிலும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

விடாமல் துரத்தும் இளையராஜா; மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு அதிரடி நோட்டீஸ்! | Ilayaraaja Sends Notice To Manjumel Boys Company

இந்த படத்தில் மிக முக்கிய நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இதன் காரணமாக இந்த படத்தை தமிழ் ரசிகர்களும் சொந்தம் கொண்டாடி வந்தனர். வெறும் ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம்

'மூச்சு விடுவது போல் எனக்கு இசை இயற்கையாக வருகிறது' ஆனால்.. - இளையராஜா பேச்சு!

'மூச்சு விடுவது போல் எனக்கு இசை இயற்கையாக வருகிறது' ஆனால்.. - இளையராஜா பேச்சு!

மஞ்சும்மல் பாய்ஸ்

சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில், குணா திரைப்படப்பாடலின் இசையமைப்பாளரான இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன், மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கண்மணி அன்போடு பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி

விடாமல் துரத்தும் இளையராஜா; மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு அதிரடி நோட்டீஸ்! | Ilayaraaja Sends Notice To Manjumel Boys Company

இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நோட்டீஸில், “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று இந்தப் பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அல்லது இந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். எனவே, பாடலைப் பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.