அஜித்தால அது முடியுமா? நெனச்சு பாருங்க.. எந்திரிச்சு போக மாட்டீங்க - இளையராஜா பகீர்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இளையராஜா
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருபவர் இசைஞானி இளையராஜா. கடந்த 45 வருடங்களுக்கு முன் துவங்கிய அவரின் இசைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். கடைசியாக இவரது இசையமைப்பில் வெளியான விடுதலை படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்நிலையில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொய் சொல்லல
அந்த வீடியோவில் 'மரி மரி நின்னே' என்ற பாடலை பாடிய அவர் "இந்த பாட்ட எங்க நான் எங்க போடுறது. இந்த மாதிரி கதை கொண்டு வரவங்கக்கிட்ட போடலாம். இந்த மாதிரி சிச்சுவேஷன் குடுக்குறவங்க கிட்ட போடலாம்.
இதுமாதிரி எத்தனையோ பாடல்கள் நமக்கு முன்னோர்கள் போட்ருக்காங்க. மலர்ந்து மலராத பாதி மலர் போல.. இதெல்லாம் அழியா பாடல்கள். உள்ளத்தையும், உயிரையும் உருக்கக்கூடிய பாடல்கள். இந்த பாடலை இன்னைக்கு விஜய்க்கு போடமுடியுமா நானு. கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க.. நான் பொய் சொல்லல.
பாடுனா நீங்க உக்காந்து கேப்பீங்களா. எழுந்து போக மாட்டீங்க? இல்ல அஜித் பாட முடியுமா..? பாடலும், இசையும் உள்ளத்தையும், உயிரையும் உயர்ந்த மேல்நிலைக்கு எடுத்துப்போவதாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் யோசியுங்கள்" என்று பேசியுள்ளார்.