'மூச்சு விடுவது போல் எனக்கு இசை இயற்கையாக வருகிறது' ஆனால்.. - இளையராஜா பேச்சு!

Tamil Cinema Ilayaraaja Tamil nadu Tamil Actors Tamil Actress
By Jiyath May 21, 2024 08:06 AM GMT
Report

இதுநாள் வரைக்கும் நான் இசையை கற்று கொள்ளவில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 

இளையராஜா

சென்னை ஐஐடி சார்பில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9-வது மாநாடு நேற்று தொடங்கியது. இதன் துவக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, ஐஐடி இயக்குநர் காமகோடி, திரிபுரா ஆளுநர் இந்திர சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், சென்னை ஐஐடி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்" துவங்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் நேற்று கையெழுத்தாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா "என் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள். ஒரு சிறிய பையன் இசையை கற்று கொள்ள சென்னை வந்தான்.

அஜித்தால அது முடியுமா? நெனச்சு பாருங்க.. எந்திரிச்சு போக மாட்டீங்க - இளையராஜா பகீர்!

அஜித்தால அது முடியுமா? நெனச்சு பாருங்க.. எந்திரிச்சு போக மாட்டீங்க - இளையராஜா பகீர்!

இயற்கையாக வருகிறது

அவனுக்கும் அவனின் அண்ணன் பாஸ்கருக்கும் அவர்களின் அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தார்கள. இசையை பற்றி தெரியாது. கற்று கொள்வதற்காக வந்தான். வந்து.. இதுநாள் வரைக்கும் கற்று கொண்டேனா என்றால்..? கற்று கொள்ளவில்லை.

நான் சாதித்து விட்டேன் என்று எல்லாரும் கூறுகிறார்கள். ஆனால், அப்படி ஒன்றும் தெரியவில்லை. அன்று கிராமத்தில் இருந்து எப்படி கிளம்பி வந்தேனோ அதே மாதிரி தான் இன்றும் இருப்பதாக உணர்கிறேன்.

இந்த மையத்தில் 200 இளையராஜா வர வேண்டும். இசை எனக்கு மூச்சாக மாறி விட்டது. மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதுபோல எனக்கு இசை இயற்கையாக வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.