Wednesday, May 7, 2025

உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை - அட்ராசிட்டியால் ஐசிசி அதிரடி!

Chennai ICC World Cup 2023
By Sumathi 2 years ago
Report

உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜார்வோ

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முன்னதாக மைதானத்தில் கூடியிருந்த 25000 க்கும் அதிகமான ரசிகர்களும் எழுந்து நிற்க தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டது.

உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை - அட்ராசிட்டியால் ஐசிசி அதிரடி! | Icc Bans Jarvo Controversial Guy In World Cup 2023

அதன்பின், வீரர்கள் களைந்து செல்லும் நேரத்தில் ஜார்வோ எனும் ஜெர்சி அணிந்த நபர் உள்ளே நுழைந்தார். விராட் கோலியை நோக்கி ஓடியவரை பாதுகாவலர்கள் தடுத்து இழுத்து சென்றனர்.

மீண்டும் களத்தில் புகுந்து காமெடி செய்த இங்கிலாந்து ரசிகர்- வைரலாகும் வீடியோ

மீண்டும் களத்தில் புகுந்து காமெடி செய்த இங்கிலாந்து ரசிகர்- வைரலாகும் வீடியோ

ஐசிசி தடை

ஆனாலும், விராட் கோலி மற்றும் சிராஜிடம் அவர் பேசிவிட்டுதான் சென்றார். அவ்வப்போது, தன்னை இந்திய அணியின் வீரராக கூறிக்கொண்டு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனை ஒரு கட்டத்தில் ரசிகர்கள், வீரர்கள் என அனைத்து தரப்புமே இவரை வேடிக்கையாகவும் நகைப்பாகவும் பார்க்கத் தொடங்கினர்.

உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை - அட்ராசிட்டியால் ஐசிசி அதிரடி! | Icc Bans Jarvo Controversial Guy In World Cup 2023

தற்போது உலகக் கோப்பையிலும் வந்துவிட்டார். தொடர்ந்து இவருக்கு எந்த விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு போட்டியில் பாதுகாப்பை மீறுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.