திருநங்கைகள் விளையாட தடை; அதை செய்தால் எதிரணிக்கு 5 ரன்கள் - ICC-யின் புதிய விதிகள்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஐசிசி வாரியக் கூட்டம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடருக்கு பிறகு 'ஐசிசி வாரியக் கூட்டம்' அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல கிரிக்கெட் விதிமுறை குறித்த மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதில், 3 முறை ஓவர்களுக்கு இடையேயான நேரம் தாமதிக்கப்பட்டல் 5 ரன்கள் எதிர் அணிக்கு பெனால்டியாக வழங்கப்படும், இரண்டு பாலின அம்பயர்களுக்கும் ஒரே விதமான ஊதியம், ஆடுகளங்களை மாற்றுவதற்கான கிரிட்டீரியா மற்றும் பாலின தகுதி விதிமுறை போன்ற விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகள்
இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடாவிற்காக பங்கேற்ற 'டேனியல் மெக்காஹே' (29) என்ற மூன்றாம் பாலின வீரரின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி தெரிவித்துள்ளதாவது "பாலின தகுதி விதிமுறையின் படி, ஆணாக பிறந்து அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்பு சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய எந்த ஒரு வீரருக்கும் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி இல்லை" என தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் வீரர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவது உள்ளிட்டவை இதற்கான காரணங்களாக ஐசிசி அறிவித்துள்ளது.