மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பும் நடராஜன் ? கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!
டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்குத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என தமிழக வேக பந்து வீச்சாளரான நடராஜன் தெரிவித்துள்ளார்.
நடராஜன்
இந்திய வேகப் பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜன் டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தினார் . இதனையடுத்து அவர் 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் நெட் பவுலராக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நன்றாகவே செயல்படுத்திக் கொண்டார்.
ஆனால் அப்போதைய போட்டியில் ஆடிய நடராஜனுக்குக் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்குப் பிறகு பின் குணமடைந்து 3 வருடங்களாகியும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மேலும் அவர் முதலாகவும் கடைசியாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டியில்,'' டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்குத் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என நடராஜன் கூறினார். நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடிக் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
இந்திய அணி
அதற்குக் காரணம் டெஸ்ட் கிரிக்கெட் அதிக நேரம் விளையாடுவதால் எனக்கு முழங்காலில் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால், அதை விளையாடுவதை தற்போதைக்கு நிறுத்திவிட்டேன். ஆனால், ஒருநாள் & டி20 கிரிக்கெட்டை விட நான் அதிகம் விரும்புகிறேன்.
நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது, அதை மிகவும் ரசித்துச் செய்தேன் . நான் திட்டமிட்டபடி பயிற்சி செய்தால் அடுத்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்குத் திரும்பலாம் என அந்த பேட்டியில் நடராஜன் கூறியிருந்தார்.