147 வருட வரலாறு - எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையை செய்த இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் யாரும் செய்யாத சாதனை ஒன்றை இந்திய அணி செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்திய அணி
தர்மசாலாவில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3 -1 என தொடரைக் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் எந்த அழுத்தமும் இன்றி ஆடிய இந்திய வீரர்கள் ரன் மலையை குவித்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனதை தொடர்ந்த, அடுத்து பேட்டிங் ஆடியது இந்திய அணி.
இதில், ஜெய்ஸ்வால் 57, ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110 ரன்கள் குவித்தனர். ஆடிய மூவருமே சிக்ஸர் அடித்தனர். ஜெய்ஸ்வால் 3 சிக்ஸர்களும், ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களும், சுப்மன் கில் 5 சிக்ஸர்கள் என மூவரும் 3 அல்லது அதற்கும் மேல் அடித்து இருந்தனர்.
சாதனை படைப்பு
இதுவே, கிரிக்கெட் உலகில் இதுவரை எந்த அணியும் செய்திடாத சாதனை ஆகும். ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அணியில் முதல் வரிசையில் 3 பேட்ஸ்மேன்களும் தலா 3 சிக்ஸ் அல்லது அதற்கும் மேல் அடிப்பது இதுதான் முதல் முறை என தெரியவந்துள்ளது.
1877ஆம் ஆண்டு தொடங்கிய டெஸ்ட் போட்டி முதல் இதுவரை எந்தப் போட்டியிலும் இந்த சாதனை நடைபெறவில்லை. அதிரடியாக ஆட்டம் ஆடும் இங்கிலாந்து அணிக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி அதிரடியாக ஆடி சாதனைப்படைத்துள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழந்தா நிலையில், 279 ரன்கள் குவித்து இருந்தது.
இதை அடுத்து சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஆட்டத்தை விறுவிறுப்பாக்கும் விதமாக சர்ஃபராஸ் கான் களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார்.