IND vs ENG: கோலியின் கோட்டை.. அடிலெய்ட் மைதானத்தில் அசத்துமா இந்தியா ?

Virat Kohli T20 World Cup 2022
By Irumporai Nov 10, 2022 02:16 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8 வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் இன்று அடிலெய்ட்டில் நடக்கவுள்ளது.

இந்தியா இங்கிலாந்து மோதல்

இந்தியா இங்கிலாந்து அணிகள் இன்று மோதுவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் பேட்டிங் பலம் தற்போது சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம் .

IND vs ENG: கோலியின் கோட்டை.. அடிலெய்ட் மைதானத்தில் அசத்துமா இந்தியா ? | Cricket T20 World Cup 2022 India Vs England

இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன் டேவிட் மாலனுக்கு உடல் நிலை பிரச்சினை காரணமாக அணியில் இல்லாதது , இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 

விராட்கோலிக்கு ராசியான மைதானம்

மேலும், அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம். விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி 907 ரன்களை குவித்துள்ளார்.

இதில் சராசரி 75.88 ஆகும். இதில் 5 சதங்கள் கூட அடங்கும் மேலும் கடைசியாக சூப்பர் -12 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து அதனை நிரூபித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.