எனது பந்தில் தோனியை அவுட் செய்ததை கௌரவமாக நினைக்கிறேன் - ஸ்ரீசாந்த்..!

MS Dhoni Chennai Super Kings Indian Cricket Team
By Thahir Jul 09, 2022 12:25 AM GMT
Report

தோனியின் பிறந்த நாளான்று வாழ்த்து தெரிவித்த ஸ்ரீசாந்த் உங்களை அவுட் ஆக்கியதை கௌரவமாக கருதுகிறேன் என பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஜூலை 7-ஆம் தேதி தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கிரிக்கெட்டில் அறிமுகம் 

ராஞ்சி போன்ற சிறிய நகரில் பிறந்து கிரிக்கெட் மீதிருந்த காதலால் ரயில்வே பணியையும் துரத்து உள்ளூர் கிரிக்கெட்டில் அட்டகாசமாக செயல்பட்டு 2004இல் ஜாம்பவான் கங்குலியின் நம்பிக்கையை பெற்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர்,

ஓய்வு பெற்ற 2019 வரை இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடும் அளவுக்கு தரமாக செயல்பட்டார். 2007இல் எதிர்பாராத வகையில் நம்பி கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பில் அனுபவம் இல்லாத போதிலும் அனைத்து வீரர்களையும் சரியான வகையில் வழிநடத்தி வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்று காட்டினார்.

எனது பந்தில் தோனியை அவுட் செய்ததை கௌரவமாக நினைக்கிறேன் - ஸ்ரீசாந்த்..! | I Feel Honored To Get Dhoni Out With My Ball

அவரது தலைமையில் 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அந்தஸ்தை பெற்ற இந்தியா 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களுடன் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்து.

மேலும் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் படையை வைத்து இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று காட்டிய அவர் 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே மகத்தான கேப்டனாக சாதனை ஒப்படைத்துள்ளார்.

ஸ்ரீசாந்த் பிறந்த நாள் வாழ்த்துகள் 

எம்எஸ் தோனிக்கு கேரளாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் வித்தியாசமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எனது பந்தில் தோனியை அவுட் செய்ததை கௌரவமாக நினைக்கிறேன் - ஸ்ரீசாந்த்..! | I Feel Honored To Get Dhoni Out With My Ball

அதாவது கடந்த 2009 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் சென்னை அணியின் கேப்டனாக விளையாடிய தோனியை ஒரு லீக் போட்டியில் 2 ரன்கள் எடுத்திருந்த போது கிளீன் போல்டாக்கினார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “மிகச்சிறந்த கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய சூப்பர் சகோதரரான அவர் எப்போதும் நான் அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தவர்.

அதை நினைத்து எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக இந்த ஒரு தருணம். லவ் யூ ப்ரோ. உங்களை அந்நாளில் அவுட் செய்ததை மிகவும் கௌரவமாக கருதுகிறேன்.

எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராக நான் வீசிய பந்துகளில் இது மிகவும் சிறந்தது. அதுவும் என்னுடைய பெரிய சகோதரரான மஹி பாய்” என்று தலைப்பாக பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் திட்டித்தீர்த்து வருகின்றனர்.மேலும் பலர் அவரை கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்.