நோயோடு சிரமம் - படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா!

Samantha Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Mar 25, 2024 06:44 AM GMT
Report

படப்பிடிப்பின்போது தான் மயங்கி விழுந்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை வெகுநாள் நீடிக்கவில்லை.

நோயோடு சிரமம் - படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா! | I Fainted During The Shoot Says Actress Samantha

கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். இதற்கிடையில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் புதிய படங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஓய்வில் இருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படம் வெளியாகியிருந்தது. சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து தற்போது மீண்டும் சமந்தா நடிக்க வந்து இருக்கிறார்.

திறந்தவெளியில் உடை மாற்றுவது கஷ்டம்... அந்த நேரத்தில் மணிவண்ணன் செய்த உதவி

திறந்தவெளியில் உடை மாற்றுவது கஷ்டம்... அந்த நேரத்தில் மணிவண்ணன் செய்த உதவி

மிகவும் சிரமப்பட்டேன்

புதிய இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது தான் மயங்கி விழுந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார்.

நோயோடு சிரமம் - படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த நடிகை சமந்தா! | I Fainted During The Shoot Says Actress Samantha

அவர் கூறியதாவது "மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போதுதான் நான் "சிட்டாடல்" வெப் தொடர் மற்றும் "குஷி" படத்தில் பிஸியாக நடித்தேன். குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது.

அதில் மிக அதிகமான ஆக்சன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு நான் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன். அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டி உதவியதால் அந்தப் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சி ஆனேன்" என்று தெரிவித்துள்ளார்.