திறந்தவெளியில் உடை மாற்றுவது கஷ்டம்... அந்த நேரத்தில் மணிவண்ணன் செய்த உதவி
நடிகர் மணிவண்ணன் தங்களுக்கு செய்த உதவி குறித்து நடிகை லாவண்யா பேசியுள்ளார்.
நடிகை லாவண்யா
சூரிய வம்சம் படத்தில் சொப்னா என்ற காதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை லாவண்யா.
தொடர்ந்து படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் இருந்து விலகி இருந்த லாவண்யா தற்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அருவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த வருடத்தில், இவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய லாவண்யா, "சில வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்ப இருக்கிற மாதிரி கேரவன் வசதி கிடையாது.
வேதனை
அதனால் நடிகைகள் நாங்கள் உடை மாற்றுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. வீடுபோன்ற செட்டப் இருக்கும். அங்கு வேஷ்டிகள் கட்டி இருக்கும். அங்கே தான் ஆடை மாற்றுவோம். இந்த கஷ்டத்தை பார்த்து தான் மணிவண்ணன் சார் அவருடைய கேரவன் எடுத்துட்டு வந்து எங்களை மாற்ற சொல்லுவார்.
பல படங்களில் நடிக்கும் போது ஓப்பனான இடத்தில் பயந்து கொண்டுதான் ஆடைகளை மாற்றுவோம்.
எனக்கு தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வராததால் பொருளாதாரத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
அந்த நேரத்தில் நான் நல்லா படித்து இருந்தால் ஆபீஸில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு போய் இருக்கலாம் என்று எனக்குத் தோணும்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.