மருமகள் சமந்தாவை விட்டு கொடுக்காத மாமனார் - நாக சைதன்யா வீட்டில் இன்னும் அது மாறல...

Samantha Naga Chaitanya
By Sumathi Feb 05, 2024 05:30 PM GMT
Report

சமந்தா - நாக சைதன்யா புகைப்படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

samantha nagarjun

அதனைத் தொடர்ந்து இருவரும் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார்.

முன்னணி நடிகைக்கு கணவராகும் நாக சைதன்யா? உறுதிசெய்த பிரபலம்!

முன்னணி நடிகைக்கு கணவராகும் நாக சைதன்யா? உறுதிசெய்த பிரபலம்!

கவனம் ஈர்த்த புகைப்படம்

ஆனால் சோபிதா துலி பாலா, அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையை பார்த்து சொல்வதே மேல் என வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், சமந்தா- நாக சைதன்யா திருமண புகைப்படம் இன்றும் நாகார்ஜுனா வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

samantha naga chaitanya

சமந்தா விவாகரத்து பெற்று நீண்ட நாட்களாகியும், அந்த புகைப்படத்தை ஏன் வீட்டின் ஹாலில் வைத்துள்ளனர் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில், இந்த புகைப்படத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

விவாகரத்துக்கான காரணம் குறித்து சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுவரை வாய் திறக்கவில்லை. தற்போது சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.