நயன்தாராவுக்குதான் முக்கியத்துவம்னு சொன்னாங்க; ஆனால், நான் அப்படி பண்ணேன் - சமந்தா பளீச்!

Nayanthara Samantha
By Sumathi Aug 18, 2023 02:30 PM GMT
Report

நயன்தாரா குறித்து நடிகை சமந்தா கூறியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது.

 நடிகை சமந்தா 

தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது.

நயன்தாராவுக்குதான் முக்கியத்துவம்னு சொன்னாங்க; ஆனால், நான் அப்படி பண்ணேன் - சமந்தா பளீச்! | Samantha Told About Nayanthara First Time

தற்போது, ஒரு சரியான கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றார். இந்நிலையில், சமந்தா சமீபத்தில் குஷி பட புரோமோஷனுக்காக ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

 முக்கியத்துவம்

விஜய் தேவரகொண்டா , சமந்தா நடிப்பில் தயாராகி வரும் குஷி படம் ஒரு பேன் இந்திய படமாக தயாராகியிருக்கிறது. அப்போது, நான் பொதுவாக நடிக்கும் போது எந்தப் படம் என்றாலும் என்னுடைய ரோல் எப்படி பட்ட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று யோசித்துதான் நடிப்பேன்.

நயன்தாராவுக்குதான் முக்கியத்துவம்னு சொன்னாங்க; ஆனால், நான் அப்படி பண்ணேன் - சமந்தா பளீச்! | Samantha Told About Nayanthara First Time

காத்துவாக்குல காதல் படத்தில் கூட எல்லாரும் நயனுக்குத்தான் அதிகளவு முக்கியத்துவம் இருக்கும்னு சொன்னாங்க. ஆனால் கதீஜாவாக அந்த ரோல் அதிகளவு பேசப்பட்டது. ஆனால் நயனுடன் சேர்ந்து பணிபுரியும் போது ஒரு வித புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது.

நயன் ஒரு அற்புதமான திறமையான நடிகை, இருந்தாலும் கதீஜா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு சொல்லமுடியாத வகையில் அமைந்தது என பேட்டியில் தெரிவித்துள்ளார்.