Friday, Apr 4, 2025

நயன்தாரா பசங்களுக்கு நான்தான் தாய்மாமன் சீர் செய்வேன் - சந்தானம் பளீச்!

Santhanam Nayanthara
By Sumathi 2 years ago
Report

நயன்தாரா பசங்களுக்கு நான்தான் தாய்மாமன் சீர் செய்வேன் என சந்தானம் கலகலப்பாக பேசியுள்ளார்.

நடிகர் சந்தானம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலாமானவர் சந்தானம். அதனைத் தொடர்ந்து, பெரியத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2004ல் மன்மதன் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

நயன்தாரா பசங்களுக்கு நான்தான் தாய்மாமன் சீர் செய்வேன் - சந்தானம் பளீச்! | Santhanam Talks About Nayanthara Babies

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ், சிம்பு, ஆர்யா, மாதவன் என அனைத்து கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியான நடித்துள்ளார். தொடர்ந்து, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘A1’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

தாய்மாமன் சீர்

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62ல் முக்கிய காமெடி நடிகராக கமிட்டாகியுள்ளார். கதை சிறப்பாக இருந்தது. ஆனால் கைவிட்டுச் சென்றது. பட கதை கூற விக்னேஷ் வீட்டிற்கு அழைத்து தடபுடல் விருந்து வைத்து நல்ல அனுசரிப்பு கொடுத்தார்.

நயன்தாரா பசங்களுக்கு நான்தான் தாய்மாமன் சீர் செய்வேன் - சந்தானம் பளீச்! | Santhanam Talks About Nayanthara Babies

நயன்தாரா என்ன அண்ணானு தான் கூப்பிடுவார். வல்லவன் படத்தில் நட்பில் ஆரம்பித்து, பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் மூலம் அண்ணன் தங்கையாக பழகினோம். அவர் எனக்கு கூட பிறக்காத தங்கச்சி. பசங்களுக்கு என் மடியில் உட்காரவச்சி காது குத்துவியாமா? என்று கேட்டேன். அப்படி நடந்தால் தாய்மாமன் சீர் செய்வேன் எனப் பேசியுள்ளார்.

தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.