வாய்ப்பு கொடுங்கள் - தமிழகத்தை மாற்ற கூடிய சக்தி படைத்தவன் நான்..! சரத்குமார் அதிரடி..!

Sarathkumar Tamil nadu
By Karthick Feb 03, 2024 09:13 AM GMT
Report

 வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 15 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ச.ம.க கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட, நாடாளுமன்ற சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

i-dont-want-to-became-cm-explains-sarathkumar

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாடாளுமன்ற கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வரும் என்று தெரிவித்து நாடாளுமன்ற தேர்தல் தங்கள் கட்சியின் இலக்கு இல்லை என்று குறிப்பிட்டு, 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று கூறினார்.

2026ல் என்னை முதலமைச்சராக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கலாம் - நடிகர் சரத்குமார்

2026ல் என்னை முதலமைச்சராக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கலாம் - நடிகர் சரத்குமார்

மேலும், விஜய் கட்சியைத் தொடங்கியதற்கு வாழ்த்துகள் கூறி, ஆனால் அவருக்கு அறிவுரை வழங்க தான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்து, நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவிலிருந்து கூட்டணி குறித்து எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

அமருவேன்

தனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்று எண்ணம் இல்லை என தெளிவுபடுத்திய அவர், விரைவில் தான் அமர வேண்டிய இடத்தில் அமருவேன் என்றும் சாதி,மத வேறுபாடின்றி கட்சியில் வாய்ப்பு வழங்குவேன் என்றார்.

i-dont-want-to-became-cm-explains-sarathkumar

மேலும், சரத்குமார் செய்யும் சாதனைகளும், சேவைகளும் ஊடகங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அரசு யோசிக்கும் திட்டங்களை அரசுக்கு முன்னே தான் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2026-இல் நான் முதல்வராக பதவியேற்பேன்..!! திருநெல்வேலியில் சரத்குமார் அதிரடி!!

2026-இல் நான் முதல்வராக பதவியேற்பேன்..!! திருநெல்வேலியில் சரத்குமார் அதிரடி!!

மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விட தான் அதிகமாக உழைத்தவன் என்று சுட்டிக்காட்டி, தான் உண்மையான மக்களின் தலைவர் என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார். விரைவில் அமர வேண்டிய இடத்தில் அமருவேன் - ஆனால் முதல்வர் ஆசையில்லை..! சரத்குமார்