2026ல் என்னை முதலமைச்சராக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கலாம் - நடிகர் சரத்குமார்
2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் என்னை முதலமைச்சராக்கினால் 150 வரை உயிருடன் வாழும் வித்தையை கற்றுத் தருவேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
மதுரை பழங்காநத்தம் சுற்றுச்சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசுகையில்,
மது இளைஞர்களின் மூளையை மலுங்கடிக்கிறது
தீர்மான விளக்க கூட்டத்தின் வாயிலாக உங்கள் நாட்டாமை முதலமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது தெரிய வரும்.
மது உடல் ஆற்றலை இழக்க செய்து மன அழுத்தத்தை உண்டாக்கி வருகிறது. பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பல வகை உருவெடுத்து உள்ளது.
அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் 2025 ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும் என்பதனை அடுத்து இளைஞர்களின் மூளையை மலுங்கடிக்க செய்வதற்கான வெளிநாடுகளின் சதிதான்.
எனக்கு 69 வயது ஆகிறது. இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளேன், அதனை 2026 ஆண்டு அறியணையில் என்னை ஏற்றினால் சொல்வேன்.
தற்போது நமது கூட்டத்தில் 440 வோல்ட் போதையில் வந்து தள்ளாடியபடி பேசி வருகிறார், அவரை திருத்து வகையில் அவருடன் பேச வேண்டும் என்று விருப்பம்தான் ஆனால் நிலைமை சரியில்லை.
தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும். தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும்.
பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன், அவர்கள் கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம் வந்தால் தான் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழவேண்டும் என்பதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் செய்தேன், அதன் படி தற்போது பொருளாதாரம் முன்னோக்கி வருகிறது.
இளைஞர்கள் தவிர்க்கவேண்டும்
தமிழகத்தின் கல்வி இந்திய அளவில் சிறந்ததாக திகழும் சூழலில், அறிவார்ந்த இளைஞர்கள் இருந்தும் போதைக்கு அடிமையாக இருப்பதால் தமிழ்நாடு தள்ளாடுகிறது. "social Drinking" என்கிற பேரில் பணியிடங்களில் மேலை நாட்டு கலாச்சாரங்களை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும்.
மாலை வேலைக்கு பிறகு வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஊதா சொல்லி சோதனை செய்யுங்கள் அதில் தவறே இல்லை.
இந்தியாவில் உள்ளது, அம்மாநிலங்களில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் மது விலக்கை அமுல்படுத்த முன்வரவேண்டும்.
அதன், முதல் நோக்கமாக மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம் என்று பேசினார்.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID IBC Tamil
யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள் IBC Tamil