2026-இல் நான் முதல்வராக பதவியேற்பேன்..!! திருநெல்வேலியில் சரத்குமார் அதிரடி!!
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நான் முதலமைச்சராக பதவி ஏற்பேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் உரை
சமத்துவ மக்கள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் திருநெல்வேலியின் கேடிசி நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆற்றிய சிறப்புரையில், கடந்த 56 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர்த்தடங்களை சிறப்பாக செயல்படுத்தவில்லை என்றும் பராமரிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை தவிர்த்து அடிப்படை பிரச்சினைகள் குறித்து பணியாற்றி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று சுட்டிக்காட்டி, பெரு மழை நேரத்தில் மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனக்கூறி, ஆனால் பணம் கொடுத்தால் தேர்தல் நேரத்தில் மாறிவிடுகின்றனர் என்று விமர்சித்தார்.
26-இல் முதலமைச்சர் ஆகுவேன்
அமைதியான ஆழமான ஆறு தாங்கள் என்றும் காட்டாற்று வெள்ளம் அல்ல என்று கூறிய சரத்குமார், 2026 தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று அறிவித்து அப்போது தங்களை பற்றி தெரியும் என்றும் கூறினர்.
50 நாளில் 72 லட்சம் கையெழுத்து..!! உதயநிதி துவங்கிய நீட் கையெழுத்து இயக்கம்..! செவிசாய்க்குமா மத்திய அரசு..?
வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் தங்களது இலக்கு அல்ல என்று தெளிவுபடுத்திய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதலமைச்சராக பதவி ஏற்பேன் என்று அதிரடியாக தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் தங்களது இலக்கு இல்லை என்றாலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அனைவரும் அங்கு வந்து உழைத்து நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என்று உறுதிபட கூறினார்.