50 நாளில் 72 லட்சம் கையெழுத்து..!! உதயநிதி துவங்கிய நீட் கையெழுத்து இயக்கம்..! செவிசாய்க்குமா மத்திய அரசு..?
தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கிய கையெழுத்து இயக்கம் தற்போது 50 நாளை எட்டியுள்ளது.
நீட் விலக்கு
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சலசப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.ஆளும் திமுக அரசு நிச்சயம் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்று கொடுக்கப்படும் என்றும் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அதன் நீட்சி தான், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கிய நீட் கையெழுத்து இயக்கம். நீட் தேர்வில் இருந்து விளக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கையெழுத்து இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் முதல் கையெழுத்து இட்டு துவங்கி வைத்தார்.
இசைவாரா.?
குடியரசுத் தலைவரிடம் நீட் விலக்கு கோரி வலியுறுத்தும் வகையில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி 50 நாட்களில் 50 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு இந்த இயக்கம் துவங்கப்பட்ட நிலையில், 50-வது நாளில் இந்த இயக்கமானது 72 லட்ச மக்களிடம் கையெழுத்தை பெற்றுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என பல தரப்பட்ட மக்களும் இந்த இயக்கத்தில் கையெழுத்து இட்ட நிலையில், தமிழக மக்களின் இந்த ஒற்றுமை குரலுக்கு குடியரசு தலைவர் இசைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.