திருமணமாகியும் குழந்தை இல்லை.. மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கத்தியால் குத்திய கணவர் - அதிர்ச்சி!

Attempted Murder Uttar Pradesh
By Vinothini Oct 02, 2023 07:43 AM GMT
Report

கர்ப்பம்தரிக்காததால் தனது மனைவியை டார்ச்சர் செய்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் டார்ச்சர்

உத்தரபிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டம் சுங்கர்ஹி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் பிசல்பூர் பகுதியை சேர்ந்த நபருடன் கடந்த 2014ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு திருமணமாகி 9 வருடம் ஆகியும் குழந்தை இல்லை, அந்தப் பெண் கருத்தரிக்காததால் அவரை அவரது கணவரும், குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

husband-tortured-his-wife-for-child

வரதட்சணையாக ரூ. 5 லட்சம், புதிய கார் கேட்டு அடித்து உதைத்துள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர், இயற்கைக்கு மாறான முறை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் ஒவ்வொரு இரவும் அந்தப் பெண்ணை நிர்வாணப் படுத்தி கொடுமை படுத்தி வந்துள்ளார்.

ஆத்திரத்தில் மருத்துவ மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் - கொடூரம்!

ஆத்திரத்தில் மருத்துவ மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் - கொடூரம்!

கொடுமை

இந்நிலையில், பரிசோதனை செய்து பார்த்ததில் அந்தப் பெண்ணின் கணவருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்துள்ளன. அதனால் தான் கருத்தரிக்கமுடியவில்லை என்று தெரியவந்தது. இதனை சகித்துக் கொள்ள முடியாத அந்தப் பெண்ணின் கணவர், குடிபோதையில் அவரை தாக்கி கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

husband-tortured-his-wife-for-child

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர், தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் அதிகாரி அசுதோஷ் ரகுவன்ஷி கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்.

அந்தப் பெண்ணின் கணவர், கணவரது பெற்றோர், அவரது மூன்று சகோதரர்கள் என ஆறு பேர் மீது ஐபிசி பிரிவுகள் 354, 307, 377, 323, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.