தகாத உறவு.. சந்தேகத்தில் மனைவியை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்து சென்ற கணவன் - கொடுமையின் உச்சம்!
ஒருவர் தனது மனைவி தகாத உறவில் இருந்ததால் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்தில் கணவர்
ராஜஸ்தானில் உள்ள பிரதாப்நகரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் ஒருவர் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக அந்த கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் நேற்று அந்த இளம்பெண்ணை அவரது மாமியாரின் கிராமத்திற்கு கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணின் கணவர் அவரை வலுக்கட்டாயமாக அவரது ஆடையை இழுத்துள்ளார், அவர் கதறி அழுதும் கண்டுகொள்ளாத கணவர் அவரை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் இழுத்து சென்றுள்ளார். இதனை அந்த ஊர் மக்கள் எதிர்க்காமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர்.
முதல்வர் கண்டனம்
இந்நிலையில், அந்த பெண்ணின் ஆடையை கணவர் அவிழ்க்கும் கொடுமையை ஒருவர் வீடியோ பதிவு செவிடு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைராகி வருகிறது, இதனை கண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்" என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் என்று டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.