முதல் மனைவியின் ரீல்ஸை ரசித்த கணவன் - பிறப்புறுப்பில் தாக்கிய 2-வது மனைவி!

Andhra Pradesh Crime
By Vinothini Jul 23, 2023 06:00 AM GMT
Report

 கணவர் ஒருவர் தனது முதல் மனைவியின் ரீல்ஸை ரசித்ததால் 2 -வது மனைவி பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரீல்ஸை ரசித்த கணவன்

ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள முப்பலா கிராமத்தை சேர்ந்தவர் கோட்டா ஆனந்த் பாபு. இவர் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வாழ்ந்த மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு வீரம்மா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார்.

women-cuts-her-husband-genital-for-seeing-1st-wife

இருவரும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர். நேற்று மாலை ஆனந்த் பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து ரசித்துள்ளார்.

மனைவி ஆத்திரம்

இந்நிலையில், தனது கணவன் முதல் மனைவியை ரசித்து கொண்டிருப்பதை கண்டு இவர் கோபமடைந்தார். இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வீரம்மா தனது கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.

women-cuts-her-husband-genital-for-seeing-1st-wife

மனைவியின் செயலால் அதிர்ச்சியடைந்த கணவன் அலறினார். இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.