இரவில் வாலிபருடன் மனைவி.. சொல்லியும் கேட்கவில்லை - ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!
மனைவியை கொலை செய்துவிட்டு தன்னைத்தானே கத்தியால் குத்தி கணவன் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலிபருடன் பேச்சு
ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் பன்னீர்செல்வம் (40) - சரண்யா (37). காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 16 வயதில் ஒருமகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சரண்யா பல் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவருடன் அவர் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பன்னீர்செல்வத்துக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் மனைவியை கண்டித்துள்ளார். மேலும், சரண்யா கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளாராம்.
இந்த பிரச்சனைகளால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சரண்யா அந்த வாலிபருடன் செல்போனில் பேசுவதை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் மட்டும் போன் பேசுவதற்காக அவர் தனது தந்தை வீட்டிற்கு தூங்க சென்று வந்ததாக தெரிகிறது.
மனைவி கொலை
இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை வாயை பொத்தி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் சரண்யா ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு வந்த பன்னீர்செல்வம் அதே கத்தியால் தன் வயிற்றில் சரமாரியாக குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதில் அவரும் உயிரிழந்துள்ளார். இந்த 2 சம்பவங்கள் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில் "முதற்கட்ட விசாரணையில், மருத்துவத் துறை சார்ந்த பணியில் உள்ள வாலிபர் ஒருவருடன் சரண்யா நெருங்கி பழகியுள்ளார்.
இருவரும் நீண்ட நேரம் செல்போனிலும் பேசி வந்துள்ளனர். அந்த வாலிபரை தேடிவருகிறோம். அவர் சிக்கிய பின்னரே இந்த சம்பவங்களில் உள்ள பின்னணி குறித்து முழுமையாக தெரியவரும்" என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.