19 வயது மனைவி செய்த செயல்; ஆத்திரத்தில் கணவன் கொடூரம் - என்ன நடந்தது?
கோயிலுக்கு மனைவியை அழைத்துச் சென்று கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நடத்தை சந்தேகம்
செங்கல்பட்டு சிலாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், வெங்கடேசனின் வீட்டுக்கு வந்த சரண், "உன் மகளை ஒரத்தி, சென்னேரி காளியம்மன் கோயில் அருகே வெட்டி கொன்னுட்டேன்" என்று கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
உடனே தகவலின் பேரில் விரைந்த போலீஸார், மதுமிதாவின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரணை கைது செய்து விசாரித்தனர். அதில் திருமணத்துக்குப்பிறகு மதுமிதா செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
கணவன் கொடூரம்
இது சரணுக்குப் பிடிக்கவில்லை. அதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட மதுமிதாவிடம் பேசிய ஒருவரை சரண் வெட்டிய வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார்.
சம்பவத்தன்று மதுமிதாவிடம் கோயிலுக்குச் செல்லலாம் எனக் கூறி அவரை பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார் சரண்.
அங்கு துமிதாவை சரண் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மாமனார் வெங்கடேசனுக்கு நேரில் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.