தகாத உறவில் தாய்; கொலை செய்த தந்தை - தப்பிக்க வைக்க மகன் செய்த செயல்!
தாயை கொலை செய்த தந்தைக்கு, மகன் உதவியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
பெங்களூரு, முலபாகிலு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரு. இவருடைய மனைவி நேத்ரா. இவர்களுக்கு ஒரு மகன். அவர் டிப்ளமோ படித்து வருகிறார்.
இந்நிலையில், கல்லூரியில் செல்ல காலை உணவு தயார் செய்து கொடுக்குமாறு தாயிடம் சிறுவன் கூறியதாகத் தெரிகிறது. அப்போது அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்துவிட்டார் என சொல்லப்பட்டது.
தொடர்ந்து, சிறுவனே காவல்நிலையத்தில் சரணடைந்தார். அதன் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இரும்புக் கம்பியில் இரண்டு பேரின் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, உயிரிழந்த நேத்ராவின் கணவர் சந்திருவை பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
தாய் கொலை
மேலும், நேத்ராவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் மீறிய உறவு இருந்தது. இதில் அவர் கடந்த சில நாட்கள் வீட்டிற்கே வராமல் இருந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட சந்திரு மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேத்ரா, வீட்டில் சமையல் செய்யாமல் இருந்து வந்துள்ளார். அந்த கோபத்தை மகன் மீது காட்டியுள்ளார்.
இதனால்தான் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், நேத்ராவை கணவர் கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகன், “இந்த கொலைப் பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன், நான் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்தான் அடைப்பார்கள்.
அங்கு நன்றாகக் கல்வியும் கற்றுத் தருவார்கள். நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுவித்து விடுவர். அதற்குள் நீ நன்றாகச் சம்பாதித்து வை ப்பா” எனக் கூறி சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.