வெறும் டீக்காக.. மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவன்!
டீக்காக, கணவன் மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீ கொடுப்பதில் தாமதம்
உத்தர பிரதேசம், போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர் ஜாதவ்(52). இவரது மனைவி சுந்தரி(50). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தரம்வீர் ஜாதவ் குடிபோதையில் வந்து மனைவி சுந்தரியிடம் கடுமையான சண்டையில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், கோபத்தில் மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்த சுந்தரி, தரம்வீர் ஜாதவுக்கு லேட்டாக டீ போட்டுக்கொடுத்துள்ளார்.
மனைவி கொடூரக் கொலை
இதனால், ஆத்திரமடைந்த தரம்வீர் ஜாதவ், சமையலறைக்கு சென்று தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து, மனைவியின் பின்னால் நின்றபடி கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் தப்பியோடிய தரம்வீரை தேடி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து தரம்வீர் மகன் கூறுகையில், என் தந்தைக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. நாள்தோறும் ஆறு முதல் எட்டு முறை அவர் தேநீர் குடிப்பார்.
அன்றும் அவர் தேநீர் கேட்டபோது, அதை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் என் தாயை அவர் வெட்டி கொன்று விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.