என்கிட்ட பேசமாட்டியா; தகாத உறவு - நண்பனின் மனைவியை கொடூரமாக கொன்ற காதலன்!

Chennai Crime
By Sumathi Aug 23, 2023 10:12 AM GMT
Report

 பெண் ஒருவரை ஆண் நண்பர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தகாத உறவு 

செங்கல்பட்டு, மறைமலை நகரைச் சேர்ந்தவர் சுந்தர்(30). இவருக்கு தாரணி என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சுந்தரின் நண்பரான சுதன், அடிக்கடி வீட்டிற்கு வந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

என்கிட்ட பேசமாட்டியா; தகாத உறவு - நண்பனின் மனைவியை கொடூரமாக கொன்ற காதலன்! | Man Killed Affair Girlfriend In Chennai

அப்போது தாரணிக்கும் சுதனுக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சுந்தருக்கு தெரிய வந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார்.

காதலி கொலை

இதற்கிடையில், தாரணி வேறு சில நபர்களுடன் வெளியில் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுதனுக்கும் தாரணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு என்னிடம் ஏன் வழக்கம் போல பேசுவது கிடையாது, என்னை விட்டு ஏன் விலகி செல்கிறாய் எனக் கேட்டுள்ளார்.

என்கிட்ட பேசமாட்டியா; தகாத உறவு - நண்பனின் மனைவியை கொடூரமாக கொன்ற காதலன்! | Man Killed Affair Girlfriend In Chennai

தொடர்ந்து, ஆத்திரமடைந்த சுதன், தாரணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, சுதன் வீடு புகுந்து 2 வயது குழந்தையின் கண் முன்னே தாரணியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.