தோழியுடன் சதி திட்டம்.. கூகுளில் பார்த்து மனைவியை கொன்ற கணவன் .. உபியில் பகீர் சம்பவம்

By Irumporai Jan 01, 2023 03:25 AM GMT
Report

கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடி தனது மனைவியினை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபியில் பரபரப்பு கொலை  

உத்திரபிரதேச மாநிலம் காசியாயாபாத்தில் வசித்து வருபவர்தான் விகாஸ் ,இவரது மனைவி சோனியா. கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியாவிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக விகாஸ் போலீசில் தெரிவித்துள்ளார்.

கூகுள் பார்த்து கொலை 

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் விகாசைக் காவலில் எடுத்து விசாரித்தனர். விகாசின் போனை பரிசோதனை செய்த போது அவர் கூகுளில் 'கொலை செய்வது எப்படி', 'எங்கிருந்து துப்பாக்கி வாங்கலாம்' என்பது போன்ற இணையத் தேடல்களை மேற்கொண்டிருப்பது தெரிய வந்தது.

தோழியுடன் சதி திட்டம்.. கூகுளில் பார்த்து மனைவியை கொன்ற கணவன் .. உபியில் பகீர் சம்பவம் | Up Man Googles How To Murder

மேலும் இணைய வழி விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டில் இருந்து விஷம் வாங்க முயன்றதும் தெரிய வந்தது. திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு, விகாசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சோனியாவுக்கும் விகாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தோழியுடன் இணைந்து சதி திட்டம்

இந்த நிலையில் விகாஸ் சோனியாவை கொலை செய்ய அவரது பெண் தோழியுடன் இணைந்து கொலை திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலையில் விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது பெண் தோழியை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். திரைப்பட பாணியில் தற்போது கொலை சமபவம் அதிகரித்து வரும் நிலையில் கூகுளை பார்த்து கொலை செய்வது எப்படி என்று பார்த்து கொலை செய்ய திட்டமிட்டது உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.