மனைவியை நிர்வாண பூஜை செய்ய சொன்ன கணவன் - நள்ளிரவில் பதறவைத்த சம்பவம்!
கேரளாவில் நண்பருடன் சேர்ந்து மனைவியை நிர்வாண பூஜைக்குக் கணவர் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஷெமீர் என்பவர் பாத்திரக்கடை ஒன்றைச் சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்குச் சமீபகாலமாக பாத்திரக்கடையில் வியாபாரம் சரிவரப் போகாததால் பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒருகட்டத்தில் வியாபாரத்தில் போட்ட முதல் கிடைக்காமல், பெரும் நஷ்டம் ஏற்பட்ட ஷெமீர் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார் . இதனால் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இது குறித்து அடிவாரம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் பிரகாசன் என்பவரிடம் தனது வேதனைகளைக் கூறி ஷெமீர் அழுதுள்ளார். மேலும் இதற்கு எதாவது தீர்வு இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். இதனைக்கேட்ட அவரது நண்பர் பிரகாசன், உனது மனைவிக்குப் பேய் பிடித்திருக்கிறது.
அவரை நிர்வாண பூஜை செய்ய வைத்தால் உனது கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று ஷெமீரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஷெமீர் வீட்டிற்கு வந்தவுடன் தனது மனைவியிடம் நண்பர் பிரகாசன் கூறியதை அனைத்தையும் தெரிவித்துள்ளார்.
நிர்வாண பூஜை
இதனைக்கேட்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.பிறகு கோபப்பட்டு சத்தம் போட்டிருக்கிறார். தொடர்ந்து தனது மனைவியை நிர்வாண பூஜைக்குச் சம்மதிக்குமாறு ஷெமீர் தொந்தரவு செய்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்துக் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதனடிப்படையில் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு காவல்துறையினர் பதிவு செய்தனர்.மேலும் பிரகாசன் மற்றும் ஷெமீர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பருடன் சேர்ந்து மனைவியை நிர்வாண பூஜைக்குக் கணவர் கட்டாயப்படுத்திய சம்பவம் மட்டுமல்லாமல் நரபலி, பின்பு நரபலி கொடுத்த மனித மாமிசத்தை மனிதர்களே உண்பதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.