நிர்வாண பூஜைக்கு இளம்பெண்கள் தேவை - 1 லட்சம் பேரம் பேசி சிறுமிகளை சீரழித்த சாமியார்
ஒரு மணி நேரம் நடைபெறும் நிர்வாண பூஜைக்கு 1 லட்சம் தருவதாக சாமியார் கூறியுள்ளார்.
நிர்வாண பூஜை
ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்தவர் போலி பூசாரி நாகேஸ்வரராவ். பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற சித்து வேலைகளை செய்து பொதுமக்களிடம் தொடர்ந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய நண்பர் நாகேந்திரபாபு என்பவரிடம், ஒரு மணி நேரம் நடைபெறும் நிர்வாண பூஜையில் உட்கார்ந்து பூஜை செய்ய இளம் பெண்கள் தேவை. அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறேன்.
12 பேர் கைது
இதன் மூலம் எனக்கு சிறிய அளவில் புதையல் கிடைக்கும் உனக்கும் அதில் பங்கு கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி ஆசைப்பட்ட நண்பர் 2 இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து, பூசாரியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நிர்வாண பூஜை மேற்கொண்டுள்ளார்.
மேலும் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்று தங்களுடைய செல்போனில் இருந்த திசா செயலி மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே விரைந்து வந்த போலீஸார் பெண்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், போலி பூசாரி நாகேஸ்வரராவ், அவருக்கு உதவிய நாகேந்திர பாபு ஆகியோர் உட்பட 12 பேரை கைது செய்துள்ளனர்.