மனைவியை கொன்று சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த கணவன் - பகீர்
மனைவியை கொன்று சடலத்துடன் கணவன் பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாந்திரீகம்
ஒடிசா, அம்பாபலாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்தமா கதுவா. இவருக்கு மாந்திரீக செயல்களில் தீவிர ஈடுபாடு இருந்துள்ளது. இந்நிலையில், சிவராத்திரி அன்று தனது 35 வயது மனைவியான மமதா கதுவாவை கொலை செய்துள்ளார்.
அத்துடன் மனைவியின் உடலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று நிர்வாண மாந்திரீக பூஜைகளை செய்துள்ளார். இதை அவரது சகோதரர் சிவா நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, புகாரளித்த நிலையில், போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மனைவி கொலை
மேலும், கணவரை கைது செய்து விசாரித்ததில் உயிரிழந்த மம்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவருடன் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில், முதல் கணவரை விட்டு பிரிந்த மம்தா அஸ்தமாவுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மாந்திரீக பூஜைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் பெண்ணை பலி கொடுத்து நிர்வாண பூஜை நடத்த நீண்டகாலமாகவே திட்டமிட்டு வந்துள்ளார். பூஜைக்கு வேறு பெண் கிடைக்காததால் தனது மனைவியையே கொன்று பூஜை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.