‘கோ பூஜை’ செய்த ரிஷி - கலாச்சாரம் மாறாத பிரதமர் வேட்பாளருக்கு குவியும் பாராட்டுகள்!
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், தனது மனைவியுடன் ’கோ பூஜை’ செய்துள்ளார்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததால் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஆளும் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் பிரிட்டனை சேர்ந்த வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் இறுதிப்போட்டியில் உள்ளனர்.
'கோ பூஜை'
செப்.,5ல் கட்சியின் 1.80 லட்சம் உறுப்பினர்கள் ஓட்டளித்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்நிலையில், ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் லண்டனில் உள்ள பக்திவேதாந்தா மனோர் கோவிலில் ஒரு பசு மாட்டுக்கு 'கோ பூஜை' செய்தனர்.
Gau Mata Pooja by Rishi Sunak and his wife in UK .. so nice to see our rich culture at display ? pic.twitter.com/UhcFhagrjG
— Viक़as (@VlKASPR0NAM0) August 22, 2022
கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற இந்த கோ பூஜை நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளன. கோ பூஜையின் போது பசு மாட்டிற்கு ஆரத்தி காண்பித்து, குங்குமம் வைத்து, ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் வழிபட்டனர்.
இதற்கு இந்தியர்கள் அவருக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.