வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அந்த தொகையை கணவன் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி!

Uttar Pradesh India
By Jiyath Jan 29, 2024 06:19 AM GMT
Report

பராமரிப்பு தொகை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பராமரிப்பு தொகை

உத்திர பிரதேசத்தில் ராகவ் மற்றும் ராகவி ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கடந்த 2016-ம் ஆண்டு மனைவி ராகவி அவரை பிரிந்துள்ளார்.

வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அந்த தொகையை கணவன் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி! | Husband Duty Bound To Provide Maintenance To Wife

இதனையடுத்து தனக்கு ராகவ் பராமரிப்பு தொகை வழங்கவேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு மாதம் 2,000 ரூபாய் பராமரிப்பு தொகை ராகவ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகவ், "எனது மனைவி ஒரு பட்டதாரி. ஆசிரியர் வேலையில் மாதம் ரூ.10,000 அவர் சம்பாதிக்கிறார்.

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

நீதிமன்றம் உத்தரவு 

எனக்கு உடல் நிலை சரியில்லை, எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளை நான் கவனிக்க வேண்டியுள்ளது. நான் கூலி வேலைதான் செய்கிறேன்.

வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அந்த தொகையை கணவன் கொடுக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி! | Husband Duty Bound To Provide Maintenance To Wife

வாடகை வீட்டில் குடியிருக்கிறேன்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நிராகரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், "மனைவி வேலை செய்து ரூ. 10,000 சம்பாதிக்கிறார் என்பதற்கு, எந்தவித ஆவணங்களையும் ராகவ் தாக்கல் செய்யவில்லை.

உடல் நலத்துடன் இருக்கும் கணவர், உடல் உழைப்பு மூலம் வருமானம் ஈட்ட முடியும். கூலி வேலை செய்தால் கூட தினமும் 300 முதல் 400 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். வேலை மூலம் வருமானம் இல்லாவிட்டாலும், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டியது கணவனின் கடமை'' என்று உத்தரவிட்டது.