கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்!

India Marriage Madhya Pradesh
By Jiyath Jan 26, 2024 05:09 AM GMT
Report

ஹனிமூனுக்கு கோவாவுக்கு பதில் அயோத்திக்கு அழைத்து சென்றதால் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விவாகரத்து 

மத்திய பிரதேச மாநிலம் போபால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், மனைவியை ஹனிமூனுக்கு கோவா அழைத்து செல்கிறேன் என உறுதியளித்த கணவன், அதற்கு பதிலாக அயோத்தியா மற்றும் வாரணாசிக்கு அழைத்து சென்றுள்ளார்.

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்! | Honeymoon To Ayodhya By Saying Goa

இதனால் ஊர் திரும்பிய 10 நாட்களில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 5 மாதங்களே ஆகியுள்ளது. இதுகுறித்த விவாகரத்து மனுவில் "கணவர் ஐ.டி. பிரிவில் வேலை செய்து நல்ல சம்பளம் வாங்குகிறார். அந்த பெண்ணும் வேலைக்கு சென்று கைநிறைய சம்பளம் வாங்குகிறார்.

இதனால் நிதி நெருக்கடி எதுவும் இல்லாதபோதும், கணவர் வெளிநாட்டுக்கு ஹனிமூன் அழைத்து செல்ல மறுத்திருக்கிறார். பெற்றோரை கவனிக்க வேண்டும் என்பதால் இந்தியாவிலேயே ஓரிடத்திற்கு செல்லலாம் என கணவர் கூறியிருக்கிறார்.

ஹனிமூன் 

இதனையடுத்து கோவாவுக்கோ அல்லது தென்னிந்தியாவுக்கோ செல்லலாம் என்று அந்த தம்பதி முடிவெடுத்துள்ளது. ஆனால் கணவர் அயோத்திக்கும், வாரணாசிக்கும் செல்லும் விமானங்களில் முன்பதிவு செய்து, ஹனிமூனுக்கு புறப்படும் ஒரு நாளுக்கு முன்பே இதுபற்றி மனைவியிடம் கூறியுள்ளார்.

கோவா, அயோத்தியால் வந்த பிரச்சனை - விவாகரத்து கோரிய மனைவி - அதிர்ச்சி சம்பவம்! | Honeymoon To Ayodhya By Saying Goa

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் அயோத்தியை பார்க்க வேண்டும் என தனது தாயார் விரும்புவதாக கணவர் கூறியுள்ளார். அப்போது அந்த பெண் எதுவும் கூறாமலும், வாக்குவாதம் செய்யாமலும் புனித தலங்களுக்கு சென்று விட்டு திரும்பியதும், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், தன்னை விட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது கணவர் அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்று மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி வீணான ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று கணவர் கூறுகிறார். அவர்கள் இருவருக்கும் போபால் குடும்ப நீதிமன்றத்தில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.