உல்லாசத்திற்கு மறுத்த மனைவி...ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!

Crime Vellore Viluppuram
By Swetha Jun 06, 2024 04:38 AM GMT
Report

உல்லாசத்திற்கு மறுத்ததால் கணவன் மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

மறுத்த மனைவி 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் சுகுமார்(28). தொழிலாளியான இவருக்கும், வேலூர் மாவட்டம் கலந்தமேடு பகுதியை சேர்ந்த திவ்யா(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நட்பாக பழகி வந்த இருவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

உல்லாசத்திற்கு மறுத்த மனைவி...ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்! | Husband Beats His Wife To Death

ஒருகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இதில் திருமணத்திற்கு முன்பே சுகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் நுழைந்த பெண்ணுக்கு இது இடியாய் அமைந்தது. மன கவலையுடன் இருந்த திவ்யா தனது கணவருக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வந்துள்ளார்.

அடிக்கடி உல்லாசம் அனுபவிக்க டார்ச்சர்...கள்ளக்காதலனை துண்டு துண்டாக வெட்டிய கள்ளக்காதலி..!

அடிக்கடி உல்லாசம் அனுபவிக்க டார்ச்சர்...கள்ளக்காதலனை துண்டு துண்டாக வெட்டிய கள்ளக்காதலி..!

வெறியில் கணவன்

இருப்பினும் சுகுமார் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காலையில் சுகுமார் வழக்கம்போல் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவியை அவர் உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது.

உல்லாசத்திற்கு மறுத்த மனைவி...ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்! | Husband Beats His Wife To Death

ஆனால் திவ்யா அதற்கு மறுத்து அவரை தன் அருகில் நெருங்க விடாமல் தள்ளி விட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுகுமார் அருகில் கிடந்த இரும்புக்கம்பியால் திவ்யாவின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனே சுகுமார் தப்பியோடினார். இந்த தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். பிறகு அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் சுகுமாரை கைது செய்தனர்.