அடிக்கடி உல்லாசம் அனுபவிக்க டார்ச்சர்...கள்ளக்காதலனை துண்டு துண்டாக வெட்டிய கள்ளக்காதலி..!
சென்னை ராயாபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி காணாமல் போன திமுக பிரமுகர் சக்கரபாணியின் உடல் பாகங்களை வீசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி 65 வயதான இவர்,திருவொற்றியூர் 7-வது வார்டு திமுக வட்ட செயலாளராக உள்ளார்.
இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சக்கரபாணி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சக்கரபாணியின் செல்போன் நம்பரை வைத்து டவர் லொகேஷன் மற்றும் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவரின் இருசக்கர வாகனம் ராயபுரம் கார்டன் 3வது சந்து பகுதியில் உள்ள தமீம்பானு என்பவரது வீட்டில் இருப்பதை டவர் லொகேஷன் மூலம் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.வீட்டின் உள்ளே நுழைந்த போது இரத்த வாடை அடித்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டை சோதனை செய்துள்ளனர்.
தமீம் பானுவின் வீட்டின் குளியலரையில் சக்கரபாணி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்ப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடல் துண்டுகளை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தமீம் பானு மற்றும் அவரின் தம்பி வாசிம் பாஷா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் டெல்லி பாபுவும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமீம் பானு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணலியில் உள்ள சக்கரபாணி வீட்டில் தமீம் பானு வாடகைக்கு குடியிருந்துள்ளார். தமீம் பானுவின் கணவர் அஸ்லாம் தி.நகரில் உள்ள கடையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இதனால் அவர் வீட்டிற்கு வாரம் ஒரு முறை மட்டுமே வந்து சென்றிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.குடும்ப சூழல் காரணமாக தமீம் பானு,சக்கரபாணியிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் தமீம் பானுவுக்கும் சக்கரபாணிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனிடையே சக்கரபாணிக்கு தெரியாமல் தமீம் பானு மணலியிலிருந்து ராயபுரம் பகுதிக்கு சென்றுள்ளார். அண்மையில் தமீம் பானு ராயபுரத்தில் குடியிருப்பது சக்கரபாணிக்கு தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து அங்கு சென்ற அவர் வட்டிக்கு கொடுத்த பணத்தை கேட்பது போல அடிக்கடி வீட்டுக்குச் சென்று தமீம் பானுவை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
அடிக்கடி சக்கரபாணி வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தமீம் பானுவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே தமீம்பானு ராயபுரம் பகுதிக்கு மாறிய போது அவரின் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 10 ம் தேதி இரவு தமீம் பானு வீட்டிற்கு குடிபோதையில் சென்ற சக்கரபாணி வலுக்கட்டாயமாக தமீம் பானுவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த சத்தம் கேட்டு வந்த தம்பி வாசிம் பாஷாவிடம் தமீம் பானு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து சக்கரபாணியை கத்தி மற்றும் அரிவாள்மனையால் கொலை செய்துள்ளனர். தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்து அடையாறு ஆற்றில் கல்லைக்கட்டி வீசியுள்ளனர்.
பின்னர் துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக குடல்,இதயம்,நுரையீரல் உள்ளிட்டவற்றை தனியாக எடுத்து பிளாஸ்டிக் பையில் கட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கல்லில் கட்டி கடலில் துாக்கி வீசியுள்ளனர்.
வீடு வந்த பின்னர் பெரிய கத்தியை கொண்டு துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் போட்டு கட்டி வைத்துள்ளனர்.
எந்த வாசனையும் வந்து விட கூடாது என்பதற்காக வீடு முழுவதும் வாசனை திரவியங்களை அள்ளி தெளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.