கணவன் -மனைவி மகிழ்ச்சியாக வாழ.. இந்த 5 மந்திரங்கள் போதும்!
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் கணவன் -மனைவி தங்கள் வாழ்க்கையில் இருவரின் புரிதல் அவசியம்.
திருமண வாழ்க்கை
எந்த சூழ்நிலையிலும் துணையை அனுசரித்துச் செல்ல வேண்டும் . எந்த வேலை செய்தாலும் அதனைக் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இவை நன்மையான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். மேலும் திருமண வாழ்க்கையில் உள்ள நல்லிணக்கம் பின்வரும் காரணங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மனைவியின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்: மகிழ்ச்சியான திருமணத்திற்கு உங்கள் மனைவியின் ரகசியங்களைப் பெற்றோரிடம் ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. மேலும் நண்பர்களிடம் அவர்களின் குறைகளை விவாதிக்க வேண்டாம்.
கணவன் -மனைவி இடையே சண்டைகள் பொதுவானவை.ஆனால் அவற்றை தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும்.
கணவன் -மனைவி
துணையுடன் ஏற்படும் மோதல்களை மனம் விட்டுப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் . குடும்பத்தினரிடம் புகார் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் துணையை மற்றவர்கடளுன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மனைவிகள் மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு பேசுவதை வெறுக்கிறார்கள்.
எந்த சூழ்நிலையிலும் தங்கள் மனைவியுடன் நில்லுங்கள் . ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலையிலும் பரஸ்பர ஆதரவைப் பொறுத்து அமையும்.குடும்ப விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு முன் தனது துணையுடன் ஆலோசனை செய்யவும். அவர்களின் கருத்துகளைக் கேட்டு வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.