கணவன் - மனைவி போட்ட பயங்கர சண்டை - அவசரமாக தரையிறங்கிய விமானம்!
கணவன், மனைவி சண்டையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வெடித்த சண்டை
ஜெர்மனியில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.
இதில் பயணித்த கணவன், மனைவி நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கிய விமானம்
மேலும், இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
'கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது தெரிவித்தார்.
அதன்பின், மீண்டும் பாங்காக் நோக்கி அந்த விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.