195 கிமீ வேகத்தில் மிரட்டிய சூறாவளி; 55 லட்சம் பேர் வெளியேற்றம் - ஹை அலெர்ட்!
மில்டன் சூறாவளி தாக்கத்தால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மில்டன் சூறாவளி
அமெரிக்காவின் புளோரிடா அடிக்கடி சூறாவளி தாக்கும் மாகாணங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், அதிக ஆபத்தான 5ம் வகை சூறாவளியாக இருந்த மில்டன்,
புளோரிடாவில் உள்ள சியாஸ்டா கீயின் என்ற பகுதிக்கு அருகே கரையைக் கடந்தது. சுமார் 195 கிமீ வேகத்தில் காற்று வீசி இருக்கிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
மோசமான பாதிப்பு
மேலும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருளில் மூழ்கின. 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடு, வர்த்தகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதில் ஹார்டி பகுதி, அதன் பக்கத்தில் உள்ள சரசோட்டா, மனாட்டி ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டன. கனமழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மேலும், பல ஏரிகள் நிரம்பி வழிந்தன. இந்த நூற்றாண்டின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.