ரெட் அலர்ட்: உலகையே எச்சரித்த ஐ.நா - வானிலை ஏஜென்சி ஷாக் தகவல்!
வானிலை ஏஜென்சி முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வானிலை ஏஜென்சி
உலகம் காணாத அளவிற்கு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2023 மாறியுள்ளது. 1.48 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக ஆர்ட்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பிரம்மாண்ட பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஏஜென்சி ஒட்டுமொத்த உலகிற்கு ரெட் அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது.
ரெட் அலர்ட்
இதுதொடர்பாக பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், நமது கிரகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. மாற்றங்கள் வேகமாக நடந்து வருகின்றன என்றார். மேலும், மிச்சிகனில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை பல்கலைக்கழகத் தலைவர் ஜோனாதன் ஓவெர்பெக் பேசுகையில்,
தற்போது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயம் பனிப்பாறைகள் உருகுவது தான். இதன் தாக்கம் வெப்ப அலைகள், வெள்ளப் பெருக்கு, கடும் வறட்சி, காட்டுத்தீ, சூறாவளிகள் உள்ளிட்டவை மூலம் எதிரொலிக்கும். எனவே மாற்று சக்தியை நோக்கி நகர்வது அவசியம்.
கடந்த ஆண்டின் இறுதியில் காற்று, சூரிய சக்தி, நீர்வளம் ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கத்தில் சுமார் 50 சதவீதத்தை எட்டி சாதனை படைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.