Zombie Virus உலகத்தை அழிக்கும் ..பாபாவாங்கா கணிப்பால் அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
இந்த உலகம் பல மாற்றங்களை சந்தித்துள்ளது,பல விசித்திரமான , மர்மமான உண்மைகளை தன் வசம் வைத்துள்ளது, குறிப்பாக தற்போது அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகிவருகின்றது.
மாறும் பருவ நிலை மாற்றம்
இதன் காரணமாக கடலின் நீர்மட்டம் அதிகரித்து உலகின் தழ்வான பகுதியில் உள்ள நாடுகள் கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கின்றனர்.இது ஒரு புறம் நமக்கு கொடுக்கப்பட்ட பெரும் பேரிடர் எச்சரிக்கையாக கூறப்பட்டாலும் , பனிப்பாறைகள் உருகும் போது அதில் பல வருடங்களாக ஒளிந்திருக்கும் வைரஸ் வெளியே வரத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜாம்பி வைரஸ்
இந்த நிலையில் ரஷ்ய விஞ்ஞானிகள் பனிகட்டியிலிருந்து புத்துயிர் பெற்ற அமீபா வைரஸ்களில் ஒன்றான ஜாம்பி வைரஸினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜாம்பி வைரஸ்கள் பனிக்கட்டிக்குள் இருந்து தற்போது உயிர்பெற்றுள்ளன.
ஆகவே இவ்வாறு உயிர்பிக்கும் வைரஸ்கள் மூலமாக சுகாதார அச்சுறுத்தல்கள் வரலாம் என எச்சரிக்கின்றனர் சர்வதேச விஞ்ஞானிகள் குறிப்பாக இந்த ஜாம்பி வைரஸ் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் சைபீரிய ஓநாயின் உடல் உலகின் பழமையான யானை இனமான மாமத் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் உலகிற்கு வரப்போகும் ஆரய்ச்சினை ஆபத்தைனை முன்னரே கணித்தவராக கூறப்படும் பாபா வாங்க பாட்டி பற்றிய சில கருத்து கணிப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும், குறிப்பாக அணுஆயுத போர் உயிரியல் ஆயுதப்போர் பற்றி இவர் கூறியுள்ள சில கணிப்புகள் பலித்தும் உள்ளது என கூறுகின்றனர்.
அவரது கருத்தினை நம்பும் ஆதரவாளர்கள் . ஆகவே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜாம்பி வைரஸ் மூலமாக பெரும் ஆபத்து வரலாம் என நம்புகின்றனர்.
பாபா வங்கா என்ன கணித்தார்?
சைபீரியாவில் உறைந்து ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கும் வைரஸை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டுபிடிக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாக, வைரஸ் மீண்டும் தலைதூக்கும். பாபா வங்காவும் அதே வைரஸ் விரைவாக கட்டுப்பாட்டை மீறிச் சுழன்று மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகரிக்கும் பையோ வெப்பன்
உலகின் பெரும் வல்லரசுக நாடுகளில் முக்கிய நாடாக உள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா எப்ப்போதும் அணுஆயுதங்கள் தயாரிப்பதையும் , உயிரி ஆயுதங்களை உறபத்தி செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளன அதே போல் நாம் சில வைரஸ்களை தடுத்துவிட்டோம் என நினைக்கும் சில வைரஸ்களை சேமித்தும் வைத்துள்ளன.
அமெரிக்கா ரஷ்யா
ஆம் முக்கியமாக பெரியம்மை இந்த வைரஸை பல நாடுகளும் முழுமையாக ஒழித்துவிட்டதாக கூறினாலும் இந்த வைரஸினை அமெரிக்கா மற்றும் ரஷ்யா சேமித்து வைத்துள்ளது. பெரியம்மை வைரஸ் அமெரிக்காவின் அட்லான்டாவில் உள்ள சி.டி.சியிலும் ரஷ்யாவின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைரஸ் பிரிபரேஷனிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அச்சுறுத்தும் கணிப்பு
ஒரு வேளை இந்த வைரஸ் மீண்டும் வந்தால் அந்த நோயாளியிடமிருந்து வைரஸை எடுத்து தடுப்பூசிதயாரிக்கலாம் என காரணம் கூறுகின்றன இந்த ஆயுத தேச நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும்.
ஆகவே பாபா வங்கா கூறியுள்ள கணிப்பின்படி கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் விரைவாக கட்டுப்பாட்டை மீறிச் சுழன்று மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார் இது தான் தற்போது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை பாபாவாங்காவின் கணிப்பு பலிக்குமா? அதற்கான பதிலை காலம் தான் கூறவேண்டும்.